உத்தம ஊழியக்காரர்கள் பலர் அறியாதவர்களாக மறைந்து இருக்கிறார்கள். எங்கோ கிராமத்தின் மூலை முடுக்குகளில் இருக்கிறார்கள், அவர்களால் ஆங்கிலம் பேசத் தெரியாது, ஆனால் அவர்களோ.........
-
பரிசுத்த ஆவியில் நிறைந்து இருக்கிறார்கள்
-
ஆண்டவரை முழு இருதயமாய் நேசிக்கிறார்கள்
-
அழியும் ஆத்துமாக்களை தேடிச் சென்று கிறிஸ்துவிடம் சேர்க்கிறார்கள்.
-
இயேசுவிடம் இருக்கக்கூடிய ஆத்தும பாரம் அவர்களிடம் இருக்கிறது.
-
ஜனங்களுக்காக கண்ணீரோடு பரிந்து பேசி ஜெபிக்கிறார்கள்.
இந்த உத்தம ஊழியக்காரர்களுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்.
உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவர்கள் மிகவும் குறைவு. தேவனுடைய உத்தமமான வழிகளை அறிந்து அதில் நடப்பவர்கள் சிலர், பல ஊழியக்காரர்கள் ஸ்தாபனங்களை ஸ்தாபித்து அதன் தலைவர்களாக மாறி கனத்தையும் வாரிக்கொள்கிறார்கள்.
தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன். 2 கொரிந்தியர் 10.
இந்த வசனத்தின் படி தங்களை பற்றியும் தங்கள் ஸ்தாபனத்தை பற்றியும் புகழ்ந்து பேசி நேரத்தை வீணடித்து வீணரானவர்கள் அநேகர்.
நான் உமது நாமத்தினாலே இதை செய்தேன் அதை செய்தேன் என்று சொன்ன அநேக ஊழியக்காரர்களை பார்த்து உங்களை எனக்கு தெரியாது என்று இயேசு சொன்னதை விளங்கி கொள்ளாத வீண் புகழ்ச்சியை நாடும் அக்கிரம சிந்தை கொண்ட ஊழியக்காரர்கள்.
இங்கு இயேசு சொன்ன அநேகர் என்கிற வார்த்தையை கவனித்தீர்களா?
பெருமையுள்ளவனுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்பதை அறிந்திருக்கிற நாம் தாழ்மையாய் இருப்பதே நல்லது. நம்மை குறித்து எப்போதும் சிறிய எண்ணம் கொண்டிருப்பதே நல்லது. நம்முடைய வேதாகம பட்டங்களையும் சபை பதவி ஸ்தானங்களையும் பார்த்து அநேக மாம்சீக கிறிஸ்தவர்கள் கவர்ச்சிக்க படலாம். ஆனால் நிச்சயமாய் தேவனை இவை ஒன்றும் கவர்ச்சிப்பதே இல்லை. ஏனென்றால்? தேவன் கல்வியறிவில்லாதவர்களை தன் ஊழியத்துக்கு தேர்ந்தெடுத்தார்.இவர்கள் எழுதின புத்தகங்களை கற்று கொடுத்து இன்றைக்கு சீஷத்துவத்திற்கு பதிலாக வேதாகம டாக்டர்களாக மாற்றி கொண்டிருக்கிறார்கள்.
இயேசுவோ சீஷனாக மாற்ற சொன்னார். தன்னை தானே வெறுத்து தன் சிலுவையை எடுத்து கொண்டு தன்னை பின் பற்றுகிற உத்தம சிஷனாக மாற சொன்னார்.
இன்னும் சொல்லப்போனால் இத்தகய வேதாகம பட்டங்கள் பிசாசை கூட கவர்ச்சிப்பதில்லை. சாத்தான் அஞ்சுவதெல்லாம் ஒரு பரிசுத்த மனிதனுக்கும் போலியா இல்லாமல் தேவனுக்கு பயந்து தாழ்மையான உண்மையான உள்ளான ஜீவியத்தில் நிலை நிற்பவனே.
நான் சாந்தமும் மனத் தாழ்மையுமாய் இருக்கிறேன் என் நுகத்தை உங்கள் மேலே ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்று கொள்ளுங்கள் என்று இயேசு சொன்னதை கற்று கொண்டு தங்கள் ஊழியத்தில் செயல்படுத்துவதையே தேவன் தகுதியாக காண்கிறார். ஒரு மெய்யான ஆவிக்குறியவன் தொடர்சியாக தன்னை தாழ்த்துவான்.அவன் சகல நற்கிரியைகளையும் மனுஷர் கண்களுக்கு மறைவாகவே செய்வான்.
ஏன் இயேசு இது போன்ற எளியவர்களை தேர்ந்தெடுத்தார்? இவர்களே தாழ்மையான இருதயமுடையவர்களும் இயேசு கூறுவதை கேட்டு அவர் சித்தத்தை மாத்திரம் செய்ய விருப்பம் கொண்டவர்களாக இருந்தனர்.
இந்த சாதாரண மனிதர்கள் ஆலயங்களுக்கு சென்று பெரிய எழுப்புதலை ஏற்படுத்திவிட்டனர். அவர்கள் ஒரு போதும் நயவசனிப்பை பேசும் தந்திர பிரசங்கிகள் அல்ல!
அவர்கள் பாவத்தை குறித்தும் நீதியை குறித்தும் நியாயதீர்ப்பை குறித்தும் கண்டித்து பேசுகிற தீர்க்கதரிசிகளாக இருந்தனர். ஆனால், இன்றைக்கு மனித புகழ்சிக்காக தங்களை உயர்த்தி கொண்டு தங்களை குறித்த மிக மிஞ்சிய எண்ணம் கொண்டவர்களின் ஊழியத்தில் ஒரு எழுப்புதலும் நடப்பதில்லை.
மீகா 6-8 ன் படி தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை தவிர வேறு எதையும் தேவன் எதிர்பார்க்கவில்லையே.
இன்றும் மனுஷர் கண்களுக்கு முன்பாக பெரிதும் மேன்மையுமாயிருப்பவைகளை குறித்து தேவன் ஒரு பொருட்டாய் எண்ணவதில்லை.
ஆமேன்.