top of page
ராஜாவை நியாயம் தீரும்
 
நாட்டை ஆளுகிறவர்களுக்கு எதிராக நியாயம் தீர்க்கும் வார்த்தைகளை பேசும்படி தேவன் நம்மை அனுமதிக்கவில்லை. அன்றைக்கு ஆட்சியாளர்களால் அப்போஸ்தலர்கள்  சிதறடிக்கபட்டதுமின்றி கொல்லப்பட்டார்கள்.அநேகர் இரத்த சாட்சியாக மரித்தார்கள். ஆனால் அவர்கள் தேவனுடைய அனுமதியின்றி ஆட்சியாளர்களுக்கு விரோதமாக தங்கள் கைகளை நீட்டவில்லை.
 
இன்றைக்கு அநேகர் தேசத்தை ஆளுகிறவர்களுக்கு எதிராக சபைகளில் பேசி  அவர்களுக்கு விரோதமாக ஜனங்களை திருப்புகிறார்கள்.
 
ஒரு ஊழியக்காரன் இப்படி ஆளுகிறவர்களை பழித்து பேசும் போது ஜனங்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மேல் வெறுப்பு ஏற்படுகிறது. தேவன் இவர்களை நியாயம் தீர்க்கும்படியாக  பேச சொன்னாரா?நாம் அதிகாரத்தில் கிரியை செய்ய கூடிய அந்தகார வல்லமைகளுக்கு எதிராக ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக அரசியல்வாதிகளை போல ஆட்சியாளர்களுக்கு விரோதமாக அவர்களை தூசித்து பேசி நியாயம் தீர்ப்பது ஏற்புடையது அல்ல. இயேசு கிறிஸ்து  தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார்.அதே மாதிரி ஸ்தேவானும் தான் கல்லறியப்பட்டு மரிக்கும் தருவாயில் அவ்வளவு வேதனையின் மத்தியிலும் ஆண்டவரே இவர்கள் மேல் இந்த பாவத்தை சுமத்தாதிரும் என்று சொன்னான். ஸ்தேவானை விடவா நீங்கள் பாடு அனுபவிக்கிறீர்கள்.
 
இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.மத் 28-18 ல் வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார். பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியான இயேசு கிறிஸ்து என்று வெளி 1-5 ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே ராஜாக்களை தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர். அவரே நீடிய பொறுமையோடு இருக்கிறார், அப்படியிருக்க ஆளுகிறவர்களை திட்டவும் சபிக்கவும் தேவன் நமக்கு அதிகாரம் கொடுக்கவில்லை, பழிவாங்குவது எனக்குறியது நானே பதில் செய்வேன் என்று தேவன் சொல்லியிருக்கிறார்..
 
காலத்துக்கு முன்பே எதையும் தீர்க்காதிருங்கள் என்று வேதம் சொல்கிறது. வேதாகமத்தில் பல இடங்களில் அநீதி செய்த ராஜாக்கள் தேவனால் தண்டிக்கபட்டார்கள். தாவீது தான் செய்த தவறுக்காக தண்டிக்கபடவில்லையா?. உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள்,ஜெபத்தில் உறுதியாக தரித்திருங்கள்.தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள். என்று பவுல் எழுதுகிறார்.
 
இன்றைக்கு ஊழியக்காரர்களுக்கு சகிப்பு தன்மை இல்லை.?!!!!!! 
 
பகைக்கிறவர்களை நேசிக்க  சொன்ன கிறிஸ்துவின் அன்பு இல்லை.?!!!!!!!
 
ஏரோது ராஜா அற்ப காரியத்துக்காக யோவான் ஸ்நானகனை சிரச்சேதம் பண்ணினான். இதை சீஷர்கள் இயேசுவுக்கு அறிவித்தார்கள். இயேசு அதை கேட்டு அவனுக்கு விரோதமாக ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அவனை நியாயம் தீர்க்கவும் இல்லை. அவர் உடனே படகில் ஏறி வனாந்திரமான இடத்திற்கு தனியே சென்றார்.(யோவான்-14). புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்.எபிரேயர் 12-24.
 

அன்றைக்கு ஆபேலின் இரத்தம் தேவனை நோக்கி என் சகோதரன் என்னை கொலை செய்து விட்டான்.எனக்கு நியாயம் செய்யும் என்று கூப்பிட்டது. இயேசுவோ பிதாவே இவர்கள் தெரியாமல் செய்துவிட்டார்கள் இவர்களை மன்னியும் என்றார். இன்றைய பெறும்பாலான ஊழியக்காரர்கள் இருதயத்தில் கோபத்தையும் எரிச்சலையும் வைத்து கொண்டு ஆளுகிறவர்களை அற்பமாக பேசி நியாயம் தீர்க்கிறார்கள்.
 
தேவனை நோக்கி இவர்களை நியாயம் தீரும் அதாவது இவர்களை தண்டியும் என்று கேட்கிறார்கள். கிறிஸ்துவின் அன்பை காண்பிக்க வேண்டியவர்கள் இன்றைக்கு உபத்திரவபடும் போது கசப்பையும் வெறுப்பையும் காண்பிக்கிறார்கள்.கிறிஸ்துவை உடையவர்களாகிய நாம் இந்த பூமிக்கு உப்பாகவும் உலகத்துக்கு வெளிச்சமாகவும் இருக்கும்படியாக அழைக்கபட்டிருக்கிறோம்.மற்ற மதத்தினருக்கும் நமக்கும் வித்தியாசங்கள் உண்டு. ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள், எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.ரோமர்  12-17.
 
நம்மை சபிக்கிறவர்களை ஆசீர்வதிக்கவும் நம்மை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணவும் முடியாதவர்கள் கிறிஸ்துவையுடையவர்கள் அல்ல.  எனவே ஆளுகிறவர்களை குறித்த தேவனுடைய சித்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு பரிசுத்த ஆவியானவர் எதற்காக ஜெபிக்க சொல்கிறார் என்பதை தெரிந்து கொண்டு ஜெபியுங்கள்.
 
அன்றைக்கு சபையையும் ஊழியக்காரர்களையும் துன்பபடுத்தின பவுலை இயேசு சந்தித்து அவனை வல்லமையாக பயன்படுத்தினார். எனவே அதிகாரத்தில் இருப்பவர்களை குறித்த தேவ சித்தத்தை தேவனுடைய பாதத்தில் காத்திருந்து அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பரம அதிகாரங்களை உடைய தேவன் அநியாயம் செய்கிறவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுக்கு பதில் செய்வார்.  
 
(அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.கொலோசெயர் 3-25). கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. 2 தெசலோனிக்கேயர் 3-5,  ஆமென்.
bottom of page