காணிக்கை கொடுப்பதற்கு முன்பு நாம் தேவனால் அங்கிகரிக்கபட வேண்டும்!!.
தேவன் ஆபேலையும் அவன் காணிக்கையையும் அங்கிகரித்தார், காயீனையும் அவனது காணிக்கையையும் அங்கிகரிக்கவில்லை என்று வேதம் சொல்கிறது.
பிரியமானவர்களே முதலாவது காணிக்கை கொடுக்கிற நாம் தேவனால் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியம். அப்பொழுது தான் நாம் கொடுக்கும் காணிக்கை தேவனால் அங்கிகரிக்கபட்டு தேவனால் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள முடியும். (அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாக பிரியமானவைகளை செய்கிறபடியினால் நாம் வேண்டி கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்று கொள்கிறோம். 1 யோவான் 3-22) காணிக்கை போடுவதற்கு முன்பு உன் சகோதரனோடு உள்ள குறையை சரி செய் அதன் பிறகு உன் காணிக்கையை கொடு என்று இயேசு சொன்ன கட்டளையை நாம் பின்பற்றுகிறதில்லை.அப்படியிருக்கும் போது நாம் எப்படி ஆசீர்வதிக்கபடமுடியும்.(ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. மத்தேயு 5:24).
சபையை நடத்தும் ஊழியக்காரர்களும் இந்த சத்தியத்தின் படி ஜனங்களை நடத்துவதில்லை. ஏனென்றால்? அவர்களுக்கு காணிக்கை வந்தால் போதும் மேலும் சபையின் தேவைகள் சந்திக்கப்பட்டால் போதும்!!!, அடுத்ததாக ஊழியக்காரர்கள் கூட பலரிடம் பேசுவதில்லை?! அவர்கள் தங்களை தாழ்த்தி பிறரிடம் உள்ள குறையை சரிசெய்வதில்லை!!?.
பிரியமான ஊழியக்காரர்களே தேவன் உங்களை மாயக்காரனே என்று சொல்லாதபடிக்கு காணிக்கை போடுதற்கு முன் இயேசு சொன்ன சத்தியத்தின் படி படி நீங்களும் நடந்து ஜனங்களையும் வழி நடத்துங்கள்.இன்றைக்கு குடும்பங்களில் ஒருவருக்கொருவர் பல வருடங்களாக பேசுவதில்லை.சபைகளில் கூட ஒருவருக்கொருவர் சண்டை போட்டு கொண்டு ஒருவருக்கொருவர் பேசாமல் காணிக்கை கொடுக்கும் போது உங்கள் காணிக்கையையும் பலியையும் நான் விரும்பவில்லை என்று ஆண்டவர் சொல்வார்.எனவே உங்களுடைய காணிக்கையை தேவன் அங்கிகரிக்க வேண்டுமென்றால் முதலாவது நீங்கள் தேவனால் அங்கிகரிக்கபட வேண்டும்.அதற்கு பிறருக்கு விரோதமாக நீங்கள் செய்த தப்பிதங்களுக்காகவும் தீமைகளுக்காகவும் அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.ஒரு வேளை பிறர் உங்களுக்கு செய்த தீமையான காரியங்களின் நிமித்தம் நீங்கள் அவர்களை மன்னிக்காமல் இருக்கலாம்.உங்கள் இருதயத்தில் கோபமும் கசப்பும் அவர்கள் மேல் வெறுப்பும் இருக்கலாம் நீங்கள் தேவனால் அங்கிகரிக்கபடும்படியாக உடனடியாக அவர்களை மன்னியுங்கள். (நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் . மத்தேயு 18-35.
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.மத்தேயு 6-15) நீங்கள் உங்களுக்கு தீமை செய்தவர்களை உங்கள் இருதயத்தில் இன்னும் குற்றவாளிகளாக தீர்த்து கொண்டிருப்பதால் தானே அவர்களை உங்களால் மன்னிக்க முடியவில்லை. நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள், நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7:2 என்று இயேசு சொன்ன சத்தியத்தை புரிந்து கொண்டீர்களா?எனவே காணிக்கை போடுவதற்கு முன்பு இயேசு சொன்ன சத்தியத்துக்கு கீழ்படியுங்கள்.
நீ தர்மம் செய்யும் போது மனுஷரால் புகழப்படுவதற்கு மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வது போல உனக்கு முன்பாக தாரை ஊதுவியாதே (மத் 6-2) என்று இயேசு கிறிஸ்து சொன்னார்.இதில் ஆலயத்தில் மனுஷரால் புகழப்படுவதற்கு...என்ற வார்த்தையை கவனித்தீர்களா?. ஆலயங்களில் மனித புகழ்சிக்காக அதாவது மனிதர்கள் தங்களை புகழும்படிக்கு காணிக்கை கொடுக்கிறவர்களை மாயக்காரனே என்று இயேசு குறிப்பிட்டதை விளங்கி கொண்டீர்களா?நீங்கள் யாருக்கு காணிக்கை கொடுக்கிறீர்கள்? சகலத்தையும் அறிந்த தேவனுக்கு கொடுக்கும் போது எதற்கு மனிதர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்?நாம் கொடுக்க வேண்டிய காணிக்கையை ஒரு கவரில் போட்டு..பெயர் குறிப்பிடாமல், இந்த பணத்தை இந்த காரியத்துக்காக கொடுக்கிறேன் என்று அதன் மேல் எழுதி அதை காணிக்கை பெட்டியில் படைக்கலாமே.
இன்றைக்கு காணிக்கை கொடுக்கும் போது இயேசு சொன்னப்படி ஏன் அந்தரங்கமாக கொடுக்க முடியவில்லை தெரியுமா? அவரையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் நாம் விசுவாசிப்பதில்லை. அடுத்ததாக மனித புகழ்சி என்ற இச்சை நம்முடைய இருதயத்தில் ஒட்டி கொண்டிருப்பதனால் நாம் அந்தரங்கமாக காணிக்கை கொடுப்பதில்லை. ஊழியக்காரர்களும் காணிக்கை கொடுப்பவர்களை ஆலயத்தில் புகழ்ந்து இவர் இவ்வளவு ரூபாய் காணிக்கை கொடுத்தார் என்று மனிதர்கள் புகழும் படியாக அறிவிக்கிறார்கள்.ஆனால் தேவனோ வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது, அதாவது அந்தரங்கமாக கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் பிதா வெளியரங்கமாக பலனளிப்பார் என்றார்.இன்றைக்கு நாம் எதை செய்து கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்து செய்யாதே என்று சொன்னதை செய்து கொண்டிருப்பதினால் தேவனிடமிருந்து முழுமையான ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளவில்லை.
பிரியமானவர்களே காணிக்கை கொடுப்பதற்கு முன்பாக முதலாவதாக பிறரிடம் உள்ள உங்கள் குறைகளை சரி பண்ணுங்கள்.அடுத்ததாக அந்தரங்கமாக உங்கள் காணிக்கையை செலுத்துங்கள். அப்பொழுது அந்தரங்கமாக பார்க்கும் தேவன் வெளியரங்கமாக உங்களுக்கு பலனளிப்பார். அப்பொழுது தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்று கொள்வீர்கள் ஆமென்.