top of page

அடுத்தது என்ன?

 

மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து  பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையைநீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன். எசேக்கியேல் 14:13.

 

அப்பம் என்னும் ஆதரவு கோல் ஜனங்களின் வாழ்வாதாரத்தையும் தேசங்களின் பொருளாதாரத்தையும் குறிக்கிறது.

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொன்ன தன்னுடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளமாக,

ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். மத்தேயு 24:7 என்றார்.

 

இப்பொழுது உலகத்தில் செயல்பாடுகளை கட்டி போட்டிருக்கும் இந்த  மகா பெரிய பாழ்க்கடிப்பானகொள்ளை நோய்க்கு அடுத்து வருவது அப்பம் என்னும் ஆதரவு கோல் முறிக்கப்படும்.அதாவது தேசங்களின் பொருளாதாரம் அசைக்கப்படும்.அதன் மூலம் அநேகருடைய வாழ்வாதாரங்கள் அசைக்கப்படும்.

 

தேசங்களை ஆளுகிறவர்கள்   பெரிய கோபுரங்களை கட்டி பெரிய சிலைகளை செய்து தங்களை உயர்த்தி கொண்டார்கள். தங்கள் தேசத்தின் பராகிரமங்களை சொல்லி பெருமை பாராட்டி கொண்டார்கள். தேவன் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார் என்பதை மறந்தார்கள். ஏழை ஜனங்களை ஒடுக்கினார்கள். எங்கும் அநீதி காணப்பட்டது. பாவம் பெருகினது. (பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது, நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது. பிரசங்கி 3:16)

 

உலகமும் அதன் ஆசை இச்சைகளும் ஒழிந்து போகும் என வேதம் சொல்கிறது.இன்றைக்கு ஜனங்கள் தங்கள் ஆசை இச்சைகளை நிறைவேற்ற முடியாமல் வீடுகளில் முடங்கி போய் கிடக்கிறார்கள். இன்றைக்கு  உலகத்தில் எல்லா காரியங்களும்,நிகழ்வுகளும், களியாட்டுகளும் விளையாட்டுகளும் முடங்கி கிடக்கின்றன.அரசாங்கம் வைராக்கியமாக  கொண்டு வந்த திட்டங்கள் கிடப்பில் போட பட்டிருக்கின்றன.பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இல்லை. (மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 25:10)

 

பணத்தை கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம்  என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கும் ஜனங்களுக்கும்  இருந்தது. பணத்தை கொண்டு அநியாயம் செய்தார்கள். ஊழியக்காரர்கள் பணத்தை சார்ந்து ஊழியம் செய்தார்கள், பணத்தை நம்பினார்கள், பணத்துக்காக அரசியல் பண்ணி  ஆலயத்தை தீட்டுபடுத்தினார்கள். தேவ சித்தத்தை மறந்தார்கள்.தேவ பயம் இல்லாமல் போயிற்று.இன்றைக்கு அந்த பணமே உங்களுக்கு பிரயோஜனமில்லாமல் போகும் நாள் வருகிறது.

 

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது, இதோ, ஏகமான தீங்கு வருகிறது. எசேக்கியேல் 7:5.

 

வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு, வயல் வெளியில் இருக்கிறவன் பட்டயத்தால் சாவான்: நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் பட்சிக்கும். எசேக்கியேல் 7:15.

 

இரட்டை உடுத்திக்கொள்வார்கள், தத்தளிப்பு அவர்களை மூடும், எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும்.

எசேக்கியேல் 7:18

 தங்கள் வெள்ளியைத் தெருக்ககளில் எறிந்துவிடுவார்கள், அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும், கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது, அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை, அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது. எசேக்கியேல் 7:19.

 

 உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன். எசேக்கியேல் 5-16.

 

ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சி தேசங்களின் மேல் வருகிறது.தேசம் தேவனை மறந்து தங்கள் பொருளாதாரத்தை நம்பியது, ஜனங்கள் தேவனை மறந்து தங்கள் வாழ்வாதாரங்களை நம்பினார்கள், தேவனுக்கு கனத்தையும் மகிமையையும் செலுத்தாமல் அவரை உதாசீனப்படுத்தி ஆசீர்வாதங்களை நேசித்தார்கள்.

 

பிரியமானவர்களே, நம் பொல்லாத வழிகளுக்காக மனம் திரும்புவோம். செய்த தவறுகளுக்காக மீறுதலுக்காக மன்னிப்பு கேட்போம்.கதறி அழுவோம்.பாவங்களை அறிக்கை பண்ணி விட்டு விடுவோம். தேவனிடத்தில் திரும்புவோம்.

 

என்ன தான் நடந்தாலும்.கர்தரை தேடுகிறவனுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது. என்று கர்த்தர் சொல்கிறார். எனவே எந்த சூழ்நிலையிலும்  தேவனை நம்புவோம் அவரை விசுவாசிப்போம். கர்தருடைய பிள்ளைகளின் அப்பத்தையும் தண்ணீரையும் தேவன் ஆசீர்வதிப்பார்.மனுஷரால் கூடாதது தேவனால் கூடும்.

 

உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள். அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவார். யாத்திராகமம் 23-25 .  ஆமென்.

bottom of page