­
top of page

வேதாகமத்தில் சொல்லப்பட்ட / சொல்லப்படாத  மறைவான உண்மைகள்

வேதாகமத்தில் அநேக காரியங்கள் மறை பொருளாக இருக்கிறது. அநேக காரியங்கள் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட நிலையில் இருக்கிறது. ஆவிக்குறியவர்கள் மாத்திரமே எல்லாவற்றையும் நிதானித்து அறிந்து கொள்கிறார்கள். ஜென்ம சுபாவமுள்ள மனிதனால் தெய்வத்துவத்தின் ரகசியங்களின் ஆழங்களை அறிந்து கொள்ள முடிவதில்லை. இன்றைக்கு அநேக ஊழியக்காரர்கள் ஆவிக்குறிய ரகசியங்களை அறிந்து கொள்ள முடியாததால் தெய்வத்துவத்துவத்தின் அடுத்த காரியங்களை தவறாய் பேசுகிறார்கள்..  (மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷருக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல,  தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்.

1 கொரிந்தியர் 2 :11

 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.

1 கொரிந்தியர் 2 :12

 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.

1 கொரிந்தியர் 2 :13) வேதாகமத்தில் சொல்லப்பட்ட காரியங்கள் உங்களுக்கு விளங்கவில்லையென்றால் நம்மை தாழ்த்தி தெரியாது என்று சொல்வதே நல்லது. அதற்க்கு மாறாக உங்க சுயஞானத்தினாலே வியாக்கியானம் பண்ணி தவறாக போதிக்காதீர்கள். வேதாகமத்தில் அநேக காரியங்கள் எழுதப்படவில்லை.சில காரியங்கள் வெளிப்படுத்தப்படவில்லை. ஆவியினவராலே மாத்திரமே அவைகளை அறிந்து கொள்ள முடியும்.(இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

யோவான் 16-12இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார்.

யோவான் 20 :30)இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு, அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன்.

யோவான் 21உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை.

2 யோவான் 1 மறைவான காரியங்கள் கர்த்தருக்கே உரியவைகள் என்று வேதம் சொல்கிறது. சமீபத்தில் ஒரு ஊழியக்காரர் பரலோகதரிசனங்கள் எல்லாம் பொய்யானவைகள் என்று மேடையில் பிரசங்கம் பண்ணிகொண்டிருந்தார்,திடீரென்று ஒரு படி மேலே போய் என்னுடைய வேதாகமத்தில் யாரும் பரலோகத்துக்கு எடுத்து கொள்ளபட்டதாக சொல்லப்படவில்லை என்றார். வேதாகமத்தில் அநேக இடங்களில் இது பற்றிய அனுபவங்களை பார்க்கலாம், வெளிப்படுத்தின விஷேசமே பரலோக தரிசனம் தான்.இன்றைக்கு சிலருக்கு கொஞ்சம் வேதத்தை கற்று கொண்டவுடன் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் சத்தியத்துக்கு புறம்பாக பேசிவிடுகிறார்கள். (தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு, தேவன் வானத்திலிருக்கிறார், நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.

பிரசங்கி 5-2 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான். அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும். அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

1 கொரிந்தியர் 2-14 எனவே எனக்கு தான் எல்லாம் தெரியும் என்று  பேசுகிற பெருமையுள்ள இந்த பிரசங்கிகளை பகுத்தறியுங்கள், (ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை.

1 கொரிந்தியர் 8:2. எனவே மறைவான மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை குறித்து உங்கள் சுய அறிவினால் கருத்து சொல்லாமல் அது பற்றிய விளக்கங்களை ஆவியானவரிடம் கேளுங்கள், (மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள், வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

உபாகமம் 29-29 எனவே  வெறும் மனித அறிவினால் வேத வசனத்தை வியாக்கியானம் பண்ணுவதை தவிர்த்து விட்டு வேதத்தை ஆக்கியோனாகிய பரிசுத்த ஆவியானவரிடம் விளக்கத்தை பெற்று கொள்வது தான் நல்லது.சிலர் பேசுகிற இயற்க்கைக்கு அப்பாற்பட்ட ஆவிக்குறிய அனுபவங்களை குறித்தும் விமர்சித்து நியாயம் தீர்க்க வேண்டாம்.(ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்து தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

1 கொரிந்தியர் 4-5- வேதாகமத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களையும் ஆவிக்குறிய காரியங்களையும் அற்பமாக எண்ணி பேசாதீர்கள்.உங்களுக்கு வரங்களும் கிருபைகளும் இல்லாவிட்டால் அதை குறித்து தேவையில்லாமல் பேசாதீர்கள்.ஏனென்றால் அவைகள் தேவனால் பகிர்ந்தளிக்கப்படுகிறது,(தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:21,22.பிரசங்க மேடையில் பயத்தோடும் நடுக்கத்தோடும் ஆவியானவர் எதை பேச சொல்கிறாரோ அதை மாத்திரமே பேசுங்கள். ஆமென்.

bottom of page